புதன், 8 டிசம்பர், 2010

மறந்தது மனித நேயம்

இன்று தினமலரில் கண்ட  செய்தி !!!!
என்ன  உலகம் ..  

source  click

 முதியவரை மூட்டையில் கட்டி ரோட்டில் வீசியகொடூரம்

ஈரோடு: உயிருக்கு போராடிய 80 வயது முதியவரை மூட்டையில் கட்டி ரோட்டில் வீசிச் சென்ற கொடூரம் ஈரோட்டில் நடந்தது.ஈரோடு அரசு மருத்துவமனை சவக்கிடங்கின் பின்புறம் பாவாடை வீதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று காலை 11 மணியளவில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரை, சாக்குப் பையில் கட்டி எடுத்து வந்த சிலர், அவரை ரோட்டோரம் போட்டுச் சென்றனர்.அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சாக்கு பைக்குள் முதியவர் உயிருக்கு போராடிய கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்பகுதியை சேர்ந்த "கனிமொழி' சுய உதவிக் குழுவினர் பூங்கொடி, ஜானகி ஆகியோர், அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர்.அங்கு வந்த ஒரு போலீஸ்காரர், முதியவரை எடுத்து செல்ல ஆளுக்கு 50 ரூபாய் பணம் தாருங்கள் என்று கேட்டார். பொதுமக்களும் 300 ரூபாய் வசூல் செய்து போலீஸ்காரரிடம் கொடுத்தனர். இரண்டு மணி நேரம் கழித்து ஆம்புலன்ஸ் வந்தது. அதில் முதியவரை ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நன்றி தினமலர் நியூஸ் 

4 comments:

சௌந்தர் சொன்னது…

என்ன கொடுமை இது மனிதன் வாழ்கை

Geetha6 சொன்னது…

மனம் பதறுகிறது!

ADMIN சொன்னது…

நித்தம் ஒரு கொடுமை இதுபோன்று.. காண நேரிடுகிறது..

வாழ்க இந்தியா..! வாழ்க ஜனநாயகம்..!

Geetha6 சொன்னது…

Thanks தங்கம்பழனி .

page

An adventure called CaratLane