செவ்வாய், 21 ஜூன், 2011

Useful Links

வெள்ளி, 17 ஜூன், 2011

வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்யும் ரோபோ


வெடிகுண்டுகளை கண்டறிந்து செயலிழக்க செய்யும் ரோபோ
புதுச்சேரி: புதுச்சேரி மிராக்கள் சமுதாய கல்லூரி மாணவர்கள், வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயல் இழக்க செய்யும் "பாம் டிடெக்டிவ் ரோபோ மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்தியாவில் வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயல் இழக்க செய்ய சாதாரண வழிமுறையே பின்பற்றப்படுகிறது. இதனால் சில நேரங்களில் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்பட்டு விடுகிறது. வெடிகுண்டுகளை தொழில்நுட்ப ரீதியாக கண்டுபிடித்து செயல் இழக்க செய்யும் பாம் டிடெக்டிவ் ரோபோ மாதிரியை, புதுச்சேரி மிராக்கள் சமுதாய கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து அறிமுகப் படுத்தியுள்ளனர். ரோபோ செயல்பாடு குறித்து நேற்று லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ., புதுச்சேரி நகராட்சி துணை சேர்மன் ஜான்குமார் முன்னிலையில் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பாம் டிடெக்டிவ் ரோபோ ஆர்.எப்., ட்ரான்ஸ்மீட்டர், ஆர்.எப்., ரிசீவர் என இரண்டு முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. ஆர்.எப். ட்ரான்ஸ்மீட்டர் ரிமோட் கன்ட்ரோலாகவும், ஆ.எப். ரிசீவர் ரோபோவாகவும் இயங்குகின்றன. ஆர் .எப். ரிசீவர் இரண்டு பேட்டரி, ஒரு ஆர்.எப். கன்ட்ரோல், மனிதர்கள் நடமாட்டத்தை கண்டறியும் யூமன் சென்சார், ஒயர்லெஸ் காமிரா, நிறங்களை கண்டறியும் கலர் சென்சார், வெடிகுண்டுகளை அலாக்காக தூக்கும் ஹேண்டல் கொக்கிகள் என நவீன கருவிகள் தேவைக்கேற்ப இருப்பு பலகையில் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை சுழலும் மூன்று சக்கரங்கள் உதவியுடன் தேவைக்கேற்ப நகர்த்த முடியும் என்பது இதன் சிறம்பம்சம். ஆர்.எப். ட்ரான்ஸ்மீட்டர் எழுப்பும் சமிக்கைகள் ஆர்.எப். ரிசீவரை அடைந்து பாம் டிடெக்டிவ் ரோபோவை இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோபோவை ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் அதிகபட்சமாக 25 மீட்டர் தொலைவு வரை நகர்த்த முடியும். இதன் மூலம் 25 மீட்டர் தொலைவில் இருந்தபடி வெடிகுண்டுகளை கண்டுபிடித்து பாதுகாப்பாக வெளியேற்றி அழிக்க முடியும்.

இது குறித்து குழு தலைவர் கார்த்திகேயன் கூறுகையில்; பாம் டிடெக்டிங் ரோபோவில் மேலும் சில நவீன கருவிகளை புகுத்தினால் மழை துளிகள், அதிர்வுகளை உணரும் வகையில் கூட தயாரிக்க முடியும். இதில் பொருத்தப்பட்டுள்ள ஒயர்லெஸ் காமிரா தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கூட துல்லியமாக காட்டி கொடுத்து விடும். இதனை தேவைக்கேற்ப வீடியோவில் பதிவு செய்து கொள்ளலாம். கலர் சென்சார் சிவப்பு, பச்சை, ஆரஞ்சு நிறங்களை கண்டறிந்து சமிக்கை கொடுக்கும். இதற்காக மைக்ரோ கன்ட்ரோல் ஐ.சி., இணைத்து புரோகிராம் செய்துள்ளோம். இதனை சோதனை ஓட்டமாகவும், மாணவர்களுக்கு ரோபோ குறித்த ஆர்வத்தை தூண்டும் வகையில் அறிமுகப் படுத்தியுள்ளோம்.இது செயல்பாட்டிற்கு வந்தால் மனித குலத்திற்கு நன்மை ஏற்படும் என்றார்.
நன்றி  தினமலர்  

ஞாயிறு, 5 ஜூன், 2011

கணணி செய்தி கணணியை முழுவதுமாக தமிழில்



உங்கள் கணணியை  முழுதாகவே தமிழில் மாற்ற நம்மில் பலருக்கு ஆசை இருக்கலாம். ஆனால் எவ்வாறு மாற்றுவது? அதற்கு எவ்வாறான மென்பொருட்கள் தேவை? இது இலவசமாக கிடைக்குமா? என்பது பலரின் எதிர்பார்ப்பு.
உங்களிடம் BitLocker குறியாக்கம் செயல்படுத்தப்பட்டிருந்தால் LIPஐ நிறுவுவதற்கு முன் அதை இடைநிறுத்தி வைக்கவும். Control Panelஐ திறந்து System and Security என்பதைத் தேர்ந்தெடுத்த பின், BitLocker Drive Encryption என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Suspend Protection என்பதைக் கிளிக் செய்யவும்.
Windows 7 LIPஇன் 32 பிட் மற்றும் 64 பிட் பதிப்புகளின் பதிவிறக்கங்கள் தனித்தனியே கிடைப்பதால் பதிவிறக்கத்தைத் தொடங்குவதற்கு முன் Windows 7இன் எந்த பதிப்பை நிறுவியுள்ளீர்கள் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.
Windows 7இன் எந்த பதிப்பை நிறுவியுள்ளீர்கள் என்பதை பின்வருமாறு தீர்மானிக்கலாம்: Start பொத்தானைக் கிளிக் செய்த பின் கணணி என்பதில் வலது கிளிக் செய்து Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் கணணி குறித்த அடிப்படைத் தகவலை இது காண்பிக்கும்.
அமைப்பு வகைக்கு, அமைப்பு என்ற பிரிவைப் பார்க்கவும். உங்கள் Windows 7 இயக்க முறைமை, 32 பிட் இயக்க முறைமையா அல்லது அது 64 பிட் இயக்க முறைமையா என்பதை இது காட்டும். 32 பிட் பதிப்பை நிறுவ நீங்கள் இவற்றை செய்யலாம்:
குறிப்பிட்ட இணையதளத்திற்கு சென்று தகவலிறக்கம் என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும், பின்னர் LIP -ஐ நிறுவ Open என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தகவலிறக்கம் என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும், கோப்பை உங்கள் கணணிக்கு நகலெடுக்க Save என்பதைக் கிளிக் செய்யவும்.
LIPஐ நிறுவ பதிவிறக்கிய கோப்பிற்கு சென்று அதை இரு முறை கிளிக் செய்யவும். 64 பிட் பதிப்பை நிறுவ மேலே உள்ள இரண்டாவது விருப்பத்தையே நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
இணையதள முகவரிகிளிக் பண்ணுங்க !
தேங்க்ஸ் z9tech

page

An adventure called CaratLane