வெள்ளி, 24 டிசம்பர், 2010



செவ்வாய், 14 டிசம்பர், 2010

நீர்முழ்கி கப்பல்

பிரிட்டனின் மிகப்பெரிய அணுசக்தி நீர்முழ்கி கப்பல் வெள்ளோட்டம்
 




  
லண்டன்: பிரிட்டனின் மிகப்பெரி அணுசக்தி நீர்முழ்கி கப்பல் சவுத்தம்டான் கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டது.   பிரிட்டனின்  மிக பெரிய அணுசக்தி நீர்முழ்‌கி கப்பல் நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டு துவக்கி வைக்கப்பட்டது.  எச்.எம்.எஸ். ஆம்புஷ் எனும் இந்த அணுசக்தி நீர்முழ்கி கப்பல் 7,400 டன் எடைகொண்டது. இதில் பல்வேறு தகவல் தொழில்நுட்பங்களுடன் ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.  219 அடி ஆழத்தில் கடலில் செல்லக்கூடியது. இதில் தானே உற்பத்தி செய்யும் ஆக்ஸிஜன்உள்ளன. 93 பேரை சுமந்து கொண்டு நாள் ஒன்று 500 மைல்கள் தூரம் செல்லக்கூடியது. மேலும் 38 ஏவுக‌ணைகள் தாங்கி செல்லும். 3000 கடல்மைல்கள் தொலைவிலிருந்தே எதிரிகளின் இலக்கினை தாக்கும் திறம் கொண்டது. முற்றிலும் அணுசக்தியால் இயங்கக்கூடிய இந்த நீர்முழ்கி கப்பல்  எச்.எம்.எஸ். ‌எனும் பெயர் கொண்ட இந்த கப்பல் லேடி ஆனிசோர் எனும் பெயரில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
தேங்க்ஸ் தினமலர்.com
தேங்க்ஸ் கூகுள் images  

புதன், 8 டிசம்பர், 2010

மறந்தது மனித நேயம்

இன்று தினமலரில் கண்ட  செய்தி !!!!
என்ன  உலகம் ..  

source  click

 முதியவரை மூட்டையில் கட்டி ரோட்டில் வீசியகொடூரம்

ஈரோடு: உயிருக்கு போராடிய 80 வயது முதியவரை மூட்டையில் கட்டி ரோட்டில் வீசிச் சென்ற கொடூரம் ஈரோட்டில் நடந்தது.ஈரோடு அரசு மருத்துவமனை சவக்கிடங்கின் பின்புறம் பாவாடை வீதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று காலை 11 மணியளவில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரை, சாக்குப் பையில் கட்டி எடுத்து வந்த சிலர், அவரை ரோட்டோரம் போட்டுச் சென்றனர்.அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சாக்கு பைக்குள் முதியவர் உயிருக்கு போராடிய கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்பகுதியை சேர்ந்த "கனிமொழி' சுய உதவிக் குழுவினர் பூங்கொடி, ஜானகி ஆகியோர், அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர்.அங்கு வந்த ஒரு போலீஸ்காரர், முதியவரை எடுத்து செல்ல ஆளுக்கு 50 ரூபாய் பணம் தாருங்கள் என்று கேட்டார். பொதுமக்களும் 300 ரூபாய் வசூல் செய்து போலீஸ்காரரிடம் கொடுத்தனர். இரண்டு மணி நேரம் கழித்து ஆம்புலன்ஸ் வந்தது. அதில் முதியவரை ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நன்றி தினமலர் நியூஸ் 

திங்கள், 6 டிசம்பர், 2010

மாற்றுத்திறனாளி ஆசிரியர்


தேனி மாவட்டம், வருஷநாடு அருகே உள்ளது காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. ஓராசிரியர் பள்ளியான இங்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ள கேசவன் போலியோவால் ஒரு கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. ஆண்டிபட்டியில் வசிக்கும் இவர் அங்கிருந்து 68 கி.மீ., தொலைவில் உள்ள மலை கிராமமான காந்திக்கிராமத்தில் பணி புரிந்து வருகிறார். இதற்காக இருசக்கர வாகனத்தில் ஆண்டிபட்டியிலிருந்து 64 கி.மீ., பயணித்து வருஷநாடு, வாலிப்பாறையை கடந்து சீலமுத்தையாபுரம் வரும் கேசவன், அங்கு வாகனத்தை நிறுத்தி விட்டு, நான்கு கி.மீ., தூரம் மலைப்பாதையில் நடந்து காந்திக்கிராமம் பள்ளிக்கு செல்கிறார்.

சில நேரங்களில் பள்ளிக்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்களை கொண்டு செல்ல வேண்டும். இதனை தூக்கிக் கொண்டு இவரால் நடக்க முடியாது என்பதால் யாரையாவது ஊரில் இருந்தே சம்பளம் கொடுத்து தூக்கி வரச்சொல்லி, அவர்களையும் உடன் அழைத்து வருகிறார். இப்பள்ளியில் முதல் வகுப்பில் நான்கு பேர், இரண்டாம் வகுப்பில் இருவர், மூன்றாம் வகுப்பில் இருவர், நான்காம் வகுப்பில் நான்கு பேர், ஐந்தாம் வகுப்பில் இருவர் என மொத்தம் 14 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் ஏழு பேர் வழக்கமாக பள்ளிக்கு வருபவர்கள். மற்றவர்கள் எப்போதாவது வருவர். ஐந்து வகுப்புகளுக்கும் கேசவன் ஒருவரே ஆசிரியர். பள்ளிக்கும் இவரே தலைமை ஆசிரியர். கல்வித்துறை அதிகாரிகள் தான் இவருக்கு உதவவேண்டும்.

 source   http://www.dinamalar.com/News_Detail.asp?Id=139538
Thanks dinamalar.

வியாழன், 2 டிசம்பர், 2010

பேசும் குப்பைத் தொட்டி

கிளிக்  source

மதுரை மேலூரைச் சேர்ந்தவர் ஜெயபாண்டியன். இவர், தர்மபுரியில் மாணவர்களுக்காக இந்தியன் அறிவியல் கல்வி அறக்கட்டளையை உருவாக்கியுள்ளார். அறக்கட்டளை மூலம் எளிய பொருட்கள் கொண்டு, பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை மாணவர்களே எளிதில் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் இதுவரையில் ரோபோ துப்பாக்கி, மிதக்கும் படகு, வாட்டர் படகுகள் உள்ளிட்ட 40 வகையான கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்துள்ளார். அறக்கட்டளை மூலம் தர்மபுரியில் மாணவர்களுக்கு அறிவியல் மியூசியம் அமைத்து இந்த கண்டுபிடிப்புகளை மாணவர்கள் பார்வையிட்டு, இதே போன்று புதிய கண்டுபிடிப்புகளை அவர்களே எளிய பொருட்கள் மூலம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் மியூசியம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இவரது முயற்சிக்கு உதவும் உள்ளங்கள் தலைவர் மாணிக்கம் மூலம் தர்மபுரியை அடுத்த நல்லம்பள்ளி யூனியன் நாகர்கூடல் புவிதம் கல்வி மைய நிர்வாக இயக்குனர் மீனாட்சி உமேஷ் கல்வி மையத்தின் நிலத்தை மியூசியம் அமைக்க கொடுத்துள்ளார். இந்த மியூசியத்தில், 200 வகையான புதிய கண்டுபிடிப்புகளை வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த தொட்டியை பூங்காக்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைப்பதோடு, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஒலி அமைப்பு மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொட்டியை வடிவமைத்துள்ளார். தற்போது, இரண்டடி கொண்ட, "டஸ்ட் பின்னில்' மாதிரியாக அறிமுகம் செய்துள்ள இந்த தொட்டி, நம் தேவைக்கு ஏற்ப பெரிய தொட்டிகளாவும் பயன்படுத்த முடியும். இந்த தொட்டி உள்ள இடத்தில் இருந்து 20 மீ., தொலைவில் மனிதர்கள் செல்லும் போது, திடீரென மூடப்பட்டிருக்கும் தொட்டி திறக்கப்பட்டு, "குப்பைகளை தொட்டியில் போடுங்கள்; வெளியில் போடாதீர்கள்', "உங்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டுங்கள்' உள்ளிட்ட சுகாதாரம் குறித்த வாசகங்கள் ஒலிக்கிறது. 20 மீ., தொலைவில் இருந்த நாம் விலகி விட்டால், தொட்டி தானாக மூடிவிடுவதோடு, விழிப்புணர்வு ஒலியும் அடங்கி விடும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.


சாதாரண பிளாஸ்டிக், "டஸ்ட் பின்னில்' சொல்நடவால்வு (மின் மாற்றி) மூலம், 20 மீ., தொலைவில் மனிதன் உள்ளிட்ட உயிரூட்டமுள்ளவர்கள் நடந்துச் செல்லும் போது, நம் உடலில் இருந்து வெளியேறும் மின் ஒலி அலைகள் மூலம் கவரப்பட்டு, தொட்டி தானாக திறக்கிறது. இதே போன்று பஸ் ஸ்டாண்ட் மற்றும் திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கும் இடங்களில் இதை பொருத்தினால், அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் வந்தவுடன் எச்சரிக்கை அறிவிப்பு ஒலிப்பது போலவும் இதை பயன்படுத்தலாம். வனப்பகுதியில் காட்டு விலங்குகள் விவசாய நிலத்தில் நுழையாமல் இருக்க இது போன்று பல்வேறு பயங்கர சத்தம் (பட்டாசு வெடிக்கும் சத்தம், முரசு அடிக்கும் சத்தம்) எழுப்பும் வகையில் பதிவு செய்து பயன்படுத்தலாம்.

நன்றி தினமலர்.


page

An adventure called CaratLane