திங்கள், 6 டிசம்பர், 2010

மாற்றுத்திறனாளி ஆசிரியர்


தேனி மாவட்டம், வருஷநாடு அருகே உள்ளது காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. ஓராசிரியர் பள்ளியான இங்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ள கேசவன் போலியோவால் ஒரு கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. ஆண்டிபட்டியில் வசிக்கும் இவர் அங்கிருந்து 68 கி.மீ., தொலைவில் உள்ள மலை கிராமமான காந்திக்கிராமத்தில் பணி புரிந்து வருகிறார். இதற்காக இருசக்கர வாகனத்தில் ஆண்டிபட்டியிலிருந்து 64 கி.மீ., பயணித்து வருஷநாடு, வாலிப்பாறையை கடந்து சீலமுத்தையாபுரம் வரும் கேசவன், அங்கு வாகனத்தை நிறுத்தி விட்டு, நான்கு கி.மீ., தூரம் மலைப்பாதையில் நடந்து காந்திக்கிராமம் பள்ளிக்கு செல்கிறார்.

சில நேரங்களில் பள்ளிக்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்களை கொண்டு செல்ல வேண்டும். இதனை தூக்கிக் கொண்டு இவரால் நடக்க முடியாது என்பதால் யாரையாவது ஊரில் இருந்தே சம்பளம் கொடுத்து தூக்கி வரச்சொல்லி, அவர்களையும் உடன் அழைத்து வருகிறார். இப்பள்ளியில் முதல் வகுப்பில் நான்கு பேர், இரண்டாம் வகுப்பில் இருவர், மூன்றாம் வகுப்பில் இருவர், நான்காம் வகுப்பில் நான்கு பேர், ஐந்தாம் வகுப்பில் இருவர் என மொத்தம் 14 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் ஏழு பேர் வழக்கமாக பள்ளிக்கு வருபவர்கள். மற்றவர்கள் எப்போதாவது வருவர். ஐந்து வகுப்புகளுக்கும் கேசவன் ஒருவரே ஆசிரியர். பள்ளிக்கும் இவரே தலைமை ஆசிரியர். கல்வித்துறை அதிகாரிகள் தான் இவருக்கு உதவவேண்டும்.

 source   http://www.dinamalar.com/News_Detail.asp?Id=139538
Thanks dinamalar.

2 comments:

ஹரிஸ் Harish சொன்னது…

வருந்த தக்க விடயம்..கடினமான சூழ்நிலையிலும் தொடர்ந்து பணியாற்றும் ஆசிரியர் பாராட்டிற்க்கு உரியவர்..

நல்ல பகிர்வு..

Geetha6 சொன்னது…

thanks Harish

page

An adventure called CaratLane