செவ்வாய், 1 ஜூன், 2010

நிலவுக்கு ரோபோ ..




நிலவுக்கு ரோபோ அனுப்பும் மாணவர்கள்

13 1/2 கோடி பரிசு அறிவிப்பு மனிதன் நிலவில் கால்பதித்து 40 ஆண்டுகள் ஆகின்றன. அதன்பிறகு எத்தனையோ விண்வெளி ஓடங்கள் நிலவுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.
தற்போது ஸ்பெயின் நாட்டு மாணவர்கள் குழு நிலவுக்கு ஒரு ரோபோவை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்கான ரோபோ தயாராகிவிட்டது. காஸ்டல்டிபெல்ஸ் ஸ்கூல் ஆப் டெக்னாலஜி பள்ளி மாணவர்கள் குழு இந்த ரோபோவை வடிவமைத்துள்ளது.
`பிக்கோ ரோவர்’ என்பது இந்த ரோபோவின் பெயராகும். இந்த ரோபோ 250 கிராம் எடை கொண்டது. பந்து போன்ற வடிவம் உடையது. நவீன கேமரா, கம்ப்யூட்டர், சிறிய மோட்டார், பேட்டரி ஆகியவை இருக்கும்.
இந்த ரோபோவானது கோளவடிவில் இருந்தாலும் பூமிபோல 33 டிகிரி சாய்வாக இருக்கும். இதன் மேல் அரைக்கோளத்தில் இருக்கும் கேமரா சுழன்று படம் எடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப அடிப்பாகமும், சக்கரங்களும் ரோபோ எடையை சமநிலைப்படுத்தும் படியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
நிலவில் உள்ள பாறைகள், மணல் ஆகியவற்றை இந்த ரோபோ ஆய்வு செய்து படங்களை அனுப்பி வைக்கும். இந்த ரோபோ எப்போது நிலவுக்கு கிளம்புகிறது என்று அறிவிக்கப்படவில்லை. ஆனால் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இதற்கு பரிசுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? 131/2 கோடி ருபாய்.
ரோபோ நிலவுக்குச் சென்று வெற்றிகரமாக செயல்பட்டு அது அனுப்பும் புகைப்படம் மற்றும் தகவல்கள் பூமிக்கு கிடைத்துவிட்டால் பரிசுத்தொகை மாணவர் குழுவுக்கு வழங்கப்படும். `கூகுள் லூனார் எக்ஸ்பிரைஸ்’ என்று இந்த பரிசுத் திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இது தவிர அரசுசாரா அமைப்பும் சன்மானம் வழங்குவதாக அறிவித்துள்ளது.

page

An adventure called CaratLane