அறுவை சிகிச்சையில் ரோபோ சிலந்தி |
சவாலான அறுவை சிகிச்சைகளில் பயன்படும் புதுமையான நானோ ரோபோ தற்போது வடிவமைக்கப்பட்டு உள்ளது. சிலந்தி வடிவில் இந்த ரோபோ உள்ளது. மனிதனின் தலைமுடி தடிமனை விட ஒரு லட்சம் மடங்கு சிறியது இந்த ரோபோ சிலந்தியாகும். கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சிலந்தி ரோபோவை உருவாக்கியுள்ளனர். உடலின் ஒவ்வொரு செல்லிலும் இரட்டைச் சுருள் ஏணி வடிவம் கொண்ட ஆர்.என்.ஏ. மூலக்கூறுகள் இருக்கிறது. நோய் ஏற்படும் போது ஆர்.என்.ஏ.க்களில் பாதிப்பு ஏற்படும். இந்த நானோ ரோபோவானது ஆர்,என்,ஏ.வின் ஏணிச் சுருளில் இணைக்கப்பட்டு அனுப்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நோயால் பிளவுபடும் டி.என்.ஏ. ஏணிச்சுருளில் இணைப்பு ஏற்படுத்தும் வேலையை இந்த ரோபோ செய்யும். ஆனால் இந்த ரோபோவால் ஏணிச் சுருளை துண்டு செய்ய முடியாது. அதே நேரத்தில் நோய்த் தொற்று செல்களை அழிக்க இதைப் பயன்படுத்த முடியும். |
ஞாயிறு, 20 ஜூன், 2010
ரோபோ
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக