3 இளைஞர்கள் தண்ணீர் மேல் வேகமாக நடந்து செல்லும் காட்சியை அந்த வீடியோ சித்தரிக்கிறது
அல்ப் கார்ட்னர் மற்றும் அவரது நண்பர்கள் இந்த வீடியோ காட்சியை பதிவேற்றியுள்ளனர்.
இந்த விளை யாட்டிற்கு நீர்மலையேறுதல் என்று புதியதோர் பெயரையும் சூட்டியுள்ளார். நீர்மேல் நடப்பது சாத்தியமில்லாதது போல் தோன்றினாலும் உண்மையில் தண்ணீர் புகாத ஷýவை அணிந்து கொண்டால் தண்ணீர் மேல் நடக்கலாம் என்றார் அவர்.
இத்தகைய ஷýவை அணிந்து கொண்டு தண்ணீர் மேல் கால் வைத்ததும் நிற்காமல் மின்னல் வேகத்தில் ஓடுவது போல நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறுகிறார். தையல் இயந்திரத்தின் செயல்பாட்டை போல கால்கள் படுவேகமாக நடக்கும் போது இது எளிதில் சாத்தியம் என்கிறார் அவர். இப்படி போர்ச்சுகல் ஏரியில் அவர்கள் 10 அடிகளை வைத்து நடந்து காட்டியிருக்கின்றனர்.
2 comments:
சூப்பர் படம் ஆச்சிரியம் தாங்க
thanks
கருத்துரையிடுக