சனி, 10 ஏப்ரல், 2010

ஏவிஜி ரெஸ்க்யூ



கம்ப்யூட்டர் ஒரு டிஜிட்டல் இயந்திரம். எந்த நேரமும் அது முடங்கிப் போகும் என்பதே உண்மை. சரி, ஊதுகிற சங்கை ஊதி வைப்போம் என்ற கதையாக இதோ இன்னும் ஒரு காப்பாற்றும் சிடி தயார் செய்திடும் தகவலை இங்கு தருகிறேன்.

இதன் பெயர் ஏவிஜி ரெஸ்க்யூ சிடி. ஆம், நமக்கெல்லாம் இலவசமாக ஆண்ட்டி வைரஸ் தரும் ஏவிஜி நிறுவனமே இதனையும் தருகிறது. இதுவும் இலவசமே.

இந்த ரெஸ்க்யூ சிடி வைரஸ் பாதிப்பினால் முடங்கிப் போகும் கம்ப்யூட்டர்களுக்கு ஒரு சிறந்த டாக்டராக இயங்குகிறது. அது மட்டுமின்றி சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்கள் மற்றும் ஐ.டி. நிர்வாகிகளுக்கும் உதவுகிறது. இதன் மூலம் சிஸ்டம் நிர்வாகம் செய்திடலாம், வைரஸ் மற்றும் ஸ்பைவேர்களால் பாதித்த கம்ப்யூட்டர்களை மீட்கலாம். எம்.எஸ். விண்டோஸ் மட்டுமின்றி, லினக்ஸ் சிஸ்டங்களையும் மீட்கலாம். யு.எஸ்.பி. ஸ்டிக் அல்லது சிடி வழியாக கிளீன் பூட் ஒன்றை மேற்கொள்ளலாம்.

இந்த ரெஸ்க்யூ சிடி என்பது லினக்ஸ் மூலம் வழங்கப்படும் இலவச போர்ட்டபிள் ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் தொகுப்பாகும். உங்களுடைய சிஸ்டம் பொதுவான வழிகளில் பூட் ஆகாத போது, இந்த சிடியைக் கொண்டு பூட் செய்திடலாம். அத்துடன் வைரஸ் பாதித்த கம்ப்யூட்டரைக் குணப்படுத்தி, வைரஸ்களை நீக்கும். இந்த வசதிகளைத் தருவதோடு கீழ்க்காணும் கூடுதல் செயல்பாடுகளையும் இது தருகிறது.
இரண்டு பேனல்களில் பைல் மேனேஜர் வசதி,எளிய விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி எடிட்டர் ஹார்ட் டிரைவ் ரெகவரி டெஸ்ட் டிஸ்க் ஆகச் செயல்பாடு நெட்வொர்க் (சர்வர், டொமைன், ஐபி முகவரி போன்றவை)வசதிகளைக் கண்டறியும் வசதி,

இதனைப் பயன்படுத்த 512 எம்பி ராம் மெமரி, இன்டல் பெண்டியம் 300 எம்.எச்.இஸட் ப்ராசசர் இருந்தால் போதுமானது. விண்டோஸ் 2000க்குப் பின் வந்த அனைத்து விண்டோஸ் இயக்கங்கலிலும் செயல்படும்.

page

An adventure called CaratLane