வியாழன், 17 டிசம்பர், 2009

Earthquake

ஒருநாளைக்கு 60 முறை நடுக்கம்: நியூசிலாந்தில் இது வாடிக்கை

மெல்போர்ன்:ஆஸ்திரேலியா அருகிலுள்ள நியூசிலாந்து நாடு தான் உலகில் நிலநடுக்கத்தால் அதிகமாக பாதிப்புக்குள்ளாகிறது என்று புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. நியூசிலாந்தில், கடந்த மார்ச் 1ம் தேதியிலிருந்து டிச., 12ம் தேதிவரை மொத்தம் 16 ஆயிரத்து 655 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கடியில் உள்ள பசிபிக் மற்றும் ஆஸ்திரேலிய கண்டத் திட்டுகள் ஒன்றுடன் ஒன்று உரசுவது தான் இதற்கு காரணம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இதுவரை நிகழ்ந்துள்ள அனைத்து நிலநடுக்கங்கள் பற்றியும் தகவல்கள் சேகரித்துவரும், தகவல் ஆராய்ச்சியாளர் கிறிஸ் மெக்டவல் என்பவர் கூறுகையில், "நியூசிலாந்தில் ஏற்படும் நிலநடுக்கங்களில் பெரும்பாலானவை மிகமிகச் சிறியவைதான். இவை, ரிக்டர் அளவுகோலில் இரண்டுக்கும் குறைவாகவே இருப்பதால் இவற்றை நிலநடுக்கம் என்று கூட சொல்ல முடியாது' என்றார்.

page

An adventure called CaratLane