கேண்டிபார் வடிவில் குறைவான விலையில் மல்ட்டி மீடியா மொபைல் போன் ஒன்றை அண்மையில் எல்.ஜி. நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
எல்.ஜி. கேஜி 195 என்ற இந்த போன், ஓரங்களில் சரியான சதுர முனைகளைக் கொண்டு பார்க்கும்போதே வித்தியாசமான மொபைலாகத் தோற்றமளிக்கிறது. 1.8 அங்குல திரை, 128 x160ரெசல்யூசனுடன் காட்சி தருகிறது.
கேமரா பட்டனுக்கு மேலாக மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், அதற்கும் மேலாக கனெக்டர் ஸ்லாட் ஆகியவை உள்ளன. மற்றொரு பக்கம் வால்யூம்/ஸூம் கீகள் தரப்பட்டுள்ளன. பின்பக்கம் எக்ஸ்டெர்னல் ஸ்பீக்கரும் கேமராவும் அமைக்கப்பட்டுள்ளன.
கருப்பு பேக் ஷெல் நீல நிற ஹைலைட்ஸ் கொண்டு அழகாகக் காட்சி தருகிறது. இதன் கீ பேட் பெரிதாக அகலாமாக அமைக்கப்பட்டிருந்தாலும் அதன் பிளாஸ்டிக் பாக்ஸ் பயன்பாட்டிற்குச் சற்று சிரமத்தினை அளிக்கிறது. பின்புற பேனலை இன்னும் சற்று இறுக்கமாக அமைத்திருக்கலாம்.
இதன் மியூசிக் பிளேயரிலிருந்து வரும் ஒலி ரம்மியமாக அழகு சேர்க்கிறது. எப்.எம். ரேடியோவில் நேரம் அமைத்து பாடல்களைப் பதியலாம். வாய்ஸ் ரெகார்டர் மற்றும் வீடீயோ பிளேயர் சிறப்பாக இயங்குகின்றன.
விலை குறைவாக இருப்பினும் இதில் WAP மற்றும் GPRS வழங்கப்பட்டு நெட்வொர்க் தொடர்பினை எளிதாக்குகின்றன. வயர்லெஸ் ஸ்டீரியோ செட் பயன்படுத்த AD2P இணைந்த புளுடூத் தரப்பட்டுள்ளது.
இவை தவிர வழக்கம்போல மற்ற அனைத்து வசதிகளும் (கன்வெர்டர், காலண்டர், அலாரம் கிளாக், செய்ய வேண்டிய வேலைகளைக் குறித்து வைக்கும் வசதி) தரப்பட்டுள்ளன. 12.4 மிமீ தடிமனில் 74 கிராம் மட்டுமே எடையாகக் கொண்டுள்ள இது பலரின் விருப்பமாக அமைய வாய்ப்புள்ளது
செவ்வாய், 29 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக