சனி, 19 மார்ச், 2011

சூப்பர் மூன்

சூப்பர் மூன்' இன்று பார்க்கலாம்



பூமிக்கு மிக அருகில் இன்று சந்திரன் வருவதால், மிகப் பெரிய அளவில் அது தெரியும். "சூப்பர் மூன்' என்று அழைக்கப்படும் இந்த சந்திரனால் தான் பூமியில் தற்போது பல்வேறு அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன என்று பரப்பப்படும் வதந்திகள் பொய்யானவை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.பூமியை சந்திரன் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இந்த நீள்வட்டப்பாதை இரு இடங்களில் பூமிக்கு நெருக்கமாக வரும். அந்தப் பகுதியில் சந்திரன் வரும் போது வழக்கத்தை விடப் பெரிதாகத் தெரியும். இன்று பூமியில் இருந்து மிகக் குறைந்த தொலைவான 3,56,577 கி.மீ., தொலைவில் சந்திரன் தோன்றும். அதனால், அது உருவ அளவில் சற்றுப் பெரிதாகவும், அதிக ஒளியுடையதாகவும் இருக்கும். கடந்த 18 ஆண்டுகளுக்குப் பின், இது போல சந்திரன் பூமியை நெருங்கி வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில், ஜப்பானில் நிகழ்ந்த நிலநடுக்கம், சுனாமி ஏற்பட்டது, சந்திரன் பூமிக்கு மிக அருகில் வருவதால் தான் என்ற கருத்து மக்களிடையே நிலவி வருகிறது. ஆனால், இது வழக்கமான ஒன்று என்றும், இதனால் மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும், நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி செந்தில்வாயல் 

7 comments:

Asiya Omar சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.

மதுரை சரவணன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்

Geetha6 சொன்னது…

நன்றி.asiya omar Madam!

Geetha6 சொன்னது…

நன்றி. மதுரை சரவணன் Sir!!

TamilRockzs சொன்னது…

தங்களை tamilrockzs official வலைப்பூ குழுமத்தில் பெருமையுடன் அறிமுக படுத்தி இருக்கிறோம் .
நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள் . தங்கள் வரவை எதிர் பார்க்கும் நல்ல உள்ளங்கள் .
பதிவுலகில் பெண்கள் ...... ( http://tamilrockzs.blogspot.com/2011/03/blog-post_28.html )

நன்றி ,
அன்புடன் ,
Admin

www.tamilrockzs.com

www.tamilrockzs.blogspot.com

Geetha6 சொன்னது…

இதோ இப்பவே போய் பார்க்க்கிறேனுங்க!!
நன்றி.

TamilRockzs சொன்னது…

அம்மா ,
எங்களது அழைப்பை ஏற்று தங்கள் வருகைக்கு மிக்க நன்றி . நேரம் கிடைக்கும் போது தங்களும் நமது வலைப்பூ குழுமத்தில் பதிவிட அன்புடன் அழைக்கிறோம் , மேலும் எமது வலைப்பூவின் இளம் பதிவாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து ஊக்கபடுதவும் .

நன்றி ,
Admin

page

An adventure called CaratLane