வியாழன், 17 மார்ச், 2011

அழிந்த கோப்புகளை மீண்டும் பெற...

thanks.:http://z9tech.com/

கணணி உபயோகிக்கும் பலர் தங்களின் முக்கியமான கோப்புகளை மீண்டும் எடுக்க முடியாத அளவில் அழித்து விட்டு இதனை எப்படி மீண்டும் பெறுவது என தெரியாமல் தவிக்கின்றனர்.இழந்த கோப்புகளை மீட்டுத் தரும் இலவச புரோகிராம்கள் பல இணையத்தில் உள்ளன. சில இலவச பதிப்பினையும் கூடுதல் வசதிகளுடன் கூடிய கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்பினையும் கொண்டதாக இருக்கின்றன.
இந்த பக்கங்களில் இவை குறித்து அடிக்கடி எழுதப்பட்டு வருவதும் வாசகர்களுக்குத் தெரியும். அந்த வகையில் நன்றாகச் செயல்படும் டேட்டா ரெகவரி புரோகிராம் ஒன்று அண்மையில் இணையத்தில் தென்பட்டது. இதன் பெயர் Raid2Raid.
இந்த புரோகிராம் பல்வகைத் திறன் கொண்டது. இது ஹார்ட் டிஸ்க், பிளாஷ் டிரைவ் மற்றும் மெமரி கார்டுகளிலிருந்து கோப்புகளை மீட்டுத் தருகிறது.
இணைத்து அறியக் கூடிய டிரைவில் உள்ள தொலைந்து போன கோப்புகள் எனில் அதனைக் கணணியுடன் இணைத்து மீட்கப்படும் கோப்புகளை ஹார்ட் டிஸ்க்கில் பதியும் படி செட் செய்யப்படுகிறது. பிரச்சினைக்கு உரியது என்னவெனில் ஹார்ட் டிஸ்க் எனில் சம்பந்தப்பட்ட டிரைவினை ஒரு இமேஜாகவும் கொடுக்கிறது.
இந்த இமேஜை எங்கேணும் பதிந்து பாதுகாக்கும் படி வைத்துவிட்டு சம்பந்தப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடலாம். பின் இமேஜைப் பயன்படுத்தி அழிக்கப்பட்ட கோப்புகளை பெறலாம். தரவிறக்கம் செய்த இந்த புரோகிராமில் டபுள் கிளிக் செய்து இதனை இயக்க வேண்டும்.
பின் எந்த டிரைவில் இருந்து கோப்புகளை ரெகவர் செய்திட வேண்டுமோ அதன் மீது டபுள் கிளிக் செய்திட வேண்டும். சில நிமிடங்களில் அந்த டிரைவில் உள்ள அனைத்து கோப்புகளும் மீட்கப்படக் கூடிய கோப்புகளின் பெயர்கள் உட்பட காட்டப்படும்.
எந்த கோப்புகளை மீட்க வேண்டுமோ அவற்றின் மீது கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Recover this file என்பதைத் தேர்ந்தெடுத்தால் மீண்டும் கிடைக்கும். அதற்கு முன் மீட்கப்படும் கோப்புகள் எங்கு சேவ் செய்யப்பட வேண்டும் என்பதனையும் தீர்மானித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
click here









page

An adventure called CaratLane