புதன், 2 பிப்ரவரி, 2011

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி

 நன்றி தினமலர்

திருப்பூர் : வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த வெங்காயம் விலை குறைந்திருப்பதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கிலோ சின்ன வெங்காயம் 40 ரூபாய்; பெரிய வெங்காயம் 20 முதல் 25 ரூபாய் என விற் பனையாகிறது. உள்ளூர் வரத்து அதிகமானதால், தக்காளியும் கிலோவுக்கு 12 முதல் 13 ரூபாய் வரை விற்பனையாகிறது.வடக்கு உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ராமலிங்கம் கூறியதாவது:காய்கறிகள் விலை குறைந் துள்ளது. ஒரு கிலோ கத்தரி 12 முதல் 18; பெரிய வெங்காயம் 20 முதல் 25; சின்ன வெங்காயம் 40; பாகல் 14; புடலை 16; பீர்க் கன் 18 முதல் 20; பச்சை மிள காய் சம்பா 20, உருண்டை 25; புடலை 16; கேரட் 4 ரூபாய் குறைந்து 36; பீன்ஸ் 8 ரூபாய் குறைந்து 32; உருளை மற்றும் கோஸ் 4 ரூபாய் குறைந்து 20; சுரைக்காய், அரசாணி, பூசணி 10; தேங்காய் 18. கருணைக்கிழங்கு 26; சேனை 20; வாழைக்காய் 18; வாழைப்பூ 5; கீரை வகை 5 குறைந்து 10; கொத்தமல்லி 10 குறைந்து 20; 10 உயர்ந்து கறி வேப்பிலை 40; 4 குறைந்து மேரக்காய் 20; கொய்யா 20; பீட்ரூட் 2 உயர்ந்து 24; முள் ளங்கி 10 குறைந்து 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது, என்றார். பூ விலை உயர்வு: பூ வியா பாரிகள் சங்க செயலாளர் சக்தி வேல் கூறுகையில், ""பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள் ளது. ஜாதி முல்லை கிலோவுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது. சம்பங்கி 20 ரூபாய், அரளி 10, மாலை சிறியது 10, பெரியது 30 ரூபாய் என உயர்ந்துள்ளது. பெங்களூரு மல்லிகை புதுப்பூ 160 மற்றும் பழையது 80 ரூபாய்க்கு விற்கிறது. சம்பங்கி 80 முதல் 100; செவ்வந்தி 80; பட்டுப்பூ 30 முதல் 40; அரளி 80 முதல் 90; மாலை சிறியது 40, பெரியது 150 ரூபாய் என விற்கிறது,'' என்றார்.எண்ணெய் விலையில் மாற்றம்: திருப்பூர் ஆயில் வியா பாரிகள் சங்க தலைவர் சந்திரன் கூறுகையில், ""கொட்டமுத்து உற்பத்தி மிகவும் குறைவாக இருக்கிறது. அதனால் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதுவரை மார்க்கெட்டில் விளக் கெண்ணெய் 140 ரூபாய்க்கு விற்றதில்லை. இதுவே முதல் முறை. தேங்காய் எண்ணெய் ஐந்து ரூபாய் உயர்ந்து 100; பாமாயில் 64; சூரியகாந்தி எண்ணெய் இரண்டு ரூபாய் குறைந்து 84; நல்லெண்ணெய் 90; ரீபன்ட் ஆயில் இரண்டு ரூபாய் உயர்ந்து 96; விளக் கெண்ணெய் 140; கடலை எண்ணெய் 88; நெய் 280 ரூபாய்க்கு விற்கிறது,'' என்றார்.வரமிளகாய் விலை குறைவு: திருப்பூர் மார்க்கெட் வியாபாரி கள் சங்க தலைவர் பாலசுப்ர மணியம் கூறுகையில், ""புளி 2, பச்சைப்பயிறு 3, பாசிபருப்பு 6, உருட்டு உளுந்து 3, கடலை பருப்பு 8 ரூபாய் என உயர்ந்துள்ளது. வரமிளகாய் 8, தட்டைப் பயிறு 6, கருப்பு உளுந்து 2 ரூபாய் என குறைந்துள்ளது. ஒரு கிலோ புளி 82 ரூபாய்; வர மிளகாய் 92; அஸ்கா 30.50; பச்சை பயறு 58; பாசிபருப்பு 74; துவரம்பருப்பு 58 முதல் 62; கருப்பு உளுந்து 62; உருட்டு உளுந்து 73; தட்டை பயறு 36; கடலை பருப்பு 36 முதல் 40; கொள்ளு 22 ரூபாய்க்கு விற்பனையாகிறது,'' என்றார்.
 சமையல் ராணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி
மங்ககையர் மலர் ஆண்டு விழா மலர் புத்தகத்தை பார்த்தேன் !!!
நம சமையல் ராணிகளுக்கு பிரதயேமாக 'அறு சுவை  விருந்து "
என்ற தலைப்பில் தங்கள் கை வனத்தை காட்ட ஒரு சந்தர்பம்
கிடைத்து இருக்கு.. நம ப்ளாக் சமையல் ராணிகள் உடனே `என்
நினைவுக்கும் கவனத்திற்கும் வந்தநேர்.அதான் நான் படித்ததை
உங்க எல்லோருக்கும் இதை பற்றி சொல்லனும் என்று இந்த பதிவு!!.

அடுத்து சீரியல் அடிமைகளுக்கு ...சாரி (ராணிகளுக்கு ) ஒரு போட்டி!!!
சீரியல் புதிர் ! இது மட்டும் இல்லைங்க இன்னும் ஏராளமான 
போட்டிகள் மங்கையர் மலர் முப்பதாம் ஆண்டு  நிறைவு 
கொண்டாட்டம் ..காத்து இருக்கு...மகிழுங்க ....நல்ல வாய்ப்பு !
நோ ஸ்கேன் ,செராக்ஸ் கூப்பன்கள் இதில் கலந்து கொள்ள.
அதனால் மங்கையர் மலர் பிப்ரவரி மாத ஆண்டு மலரை வாங்கி 
படிங்க.போட்டிகளில் கலக்குங்க...வெற்றி பெறுங்க..வாழ்த்துக்கள் 

டிஸ்கி :  இது மாதிரி குறிப்பா நம ப்ளாக் பதிவர்களுக்கு ஒரு போட்டி 
சீக்கிரமா வைக்க சொல்லுங்கப்பா  ..நாமளும் கலந்துக்க வேணாமா?


1 comments:

Geetha6 சொன்னது…

Pranavam Ravikumar a.k.a. Kochuravi
Thanks!

page

An adventure called CaratLane