www.flashscrap.com
ஈகைத் திருநாள் எனப்படுவது இசுலாமிய இருபெரும் திருநாட்களில் ஒன்றாகும்.
இசுலாமியார்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று
முடித்ததை அடுத்து இது கொண்டாடப்படுகின்றது. ரமலான் பெருநாள் அல்லது நோன்பு
பெருநாள் என்றும் இது அழைக்கப்படுகின்றது.
ஈத்’ என்னும் அரபுச் சொல்லுக்கு கொண்டாட்டம் அல்லது திருநாள்/பெருநாள் என்பது
பொருளாகும். முகம்மது நபி (ஸல்) அவர்கள் மதீனா நகர் வந்தபோது மதீனா வாசிகள் இரு
நாட்களை பெரும் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஈதுல் ஃபித்ர் ரமலான் மாதம் முழுவதும் இறைவனுக்காக நோன்பு நோற்றபின் ஷவ்வால் மாதம்
முதல் பிறை பார்த்தபின்னர் கொண்டாடப்படும் பெருநாளாகும்.ரமலான் மாதம் முழுவதும்
உண்ணாமல் பருகாமல் பசித்திருந்து நோன்பு நோற்றவர்களுக்கு இறைவன் அளிக்கும் பரிசாக
இந்த நோன்பு அமைந்துள்ளது.
♥
0 comments:
கருத்துரையிடுக