செவ்வாய், 7 செப்டம்பர், 2010

நேர மேலாண்மை






மார்க்கெட்டில் என் வண்டியை பார்க் செய்து 


விட்டு சாமான் வாங்கி கொண்டு வெளியே வந்தேன்..அப்போது வெளியில் நின்று 


கொண்டு இருந்த செக்யூரிட்டி மற்றும் சூப்பர் மார்க்கெட் ஊழியர் ஒரு பெண்மணியை 


தடுத்து நிறுத்தி!! மேடம், இது உங்க வண்டி இல்லை ..அதோ பாருங்க உங்க வண்டி 


அங்கே இருக்குது பாருங்க என்று கூறினார்...அந்த பெண் என் வண்டியில் தன்னுடைய  


சாமான்களை வைத்து, வண்டியில் சாவியை போட்டு ஸ்டார்ட் செய்து கொண்டு இருந்தார்!!


நான் கிட்டே சென்று,,இது என் வண்டி என்று அடயாளம் காட்டினேன்.அந்த பெண் முகம் 


சிவந்து, சாரி.. மனித்து கொள்ளுங்கள்.பேங்க் சென்று விட்டு ஏதோ யோசனையில் ஒரே 


மாதிரி யிருந்த என் வண்டி என்று ஸ்டார்ட் பண்ணி விட்டேன் என்று முகம் சிவந்தார்.


காரணம் பாங்கில் நகை அடமானம் வைத்து பணம் வாங்கி கடைசி தேதி ஞாபஹம் 


இல்லாததால் நகை மூழ்கி விடும் நிலையில் ஓரிரு நாட்களில் ஏலத்தில் வந்து விடும் 


என்று எச்சரிக்கை செயத காரணத்தால் , நோட்டிசை படித்த வண்ணம் தான் வண்டி 


என்று நினைத்து என் வண்டியில் அமர்ந்து குழப்பத்துடன் ஸ்டார்ட் செய்து உள்ளார்!! 


அதனால் நேரம் மேலாண்மை என்பது இன்றைய இயந்திர வாழ்கைக்கு மிகவும் தேவை.


வேலைக்கு போகும் பெண்களே..


உங்கள் வேலைகளை திட்டம் இடுங்கள்.


இன்று என்ன செய்ய வேண்டும் என்று முதல் நாள் இரவே 


பட்டியல் இடுங்கள். அது சமயலாகவோ அல்லது வேலையாக 


இருந்தாலும் சரி ..திட்டம் இடுங்கள் ..பிளான் பண்ணுங்கள்.


டே ப்லான்நேர்,மன்த் ப்லான்நேர் ,இயர் ப்லான்நேர் என்று 


திட்டம் இடுங்கள்.ப்ரயொரிட்டி எதுக்கு முதலில் என்பதை 


வரிசை படுத்துங்கள்.பணம் கட்டவேண்டிய கடைசி தேதியை 


நன்றாக கோடிட்டு கண்ணில் தென்படும் இடத்தில சார்ட் போல் 


தயார் செய்து அந்த வருடம் ஆரம்பத்தில் எதற்கு எல்லாம் 


உடனடியாக பணம் கட்ட வேண்டும் என்பதை மனதில் கொண்டு 


பணத்தை ஆரம்பத்தில் சேமித்து வைத்தால் தான் ,டைம் வரும் 
\
போது சிரமம் இல்லாமல் அவதிபடாமல் சுலபமாக கட்ட முடியும்!!


இன்று என்ன வேலைகள் பெண்டிங் என்பதை முன் கூட்டி அறிந்து கொள்வது


மிகவும் அவசியம்.அபோது தான் அதை பற்றிய சிந்தனை மேலோங்கும் !!

page

An adventure called CaratLane