அமெரிக்காவின் டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட் நிறுவனம் மற்றும் பிரான்ஸ் நாட்டின் ஆரஞ்சு வேல்லி நிறுவனம் ஆகியவை இணைந்து இதற்கான டி.வி. வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த டி.வி.யில் ஒரு 3டி கேமராவும், சென்சாரும் இணைக்கப்பட்டு இருக்கும்.
டி.வி.க்கான சுவிட்சை ஆன் செய்தால்போதும். மற்றபடி எல்லா வேலைகளையும் ரிமோட் இல்லாமல் கைஅசைவிலேயே செய்யலாம். கேமராவும், சென்சாரும் உங்கள் அசைவுகளுக்கு ஏற்ப டி.வி.யை இயக்கும். விரல்களை அசைப்பதற்கு ஏற்ப சானல் மாற்றவோ, சப்தத்தை கூட்டவோ குறைக்கவோ முடியும்.
அதேபோல வீடியோ கேம்ஸ் விளையாட நினைத்தாலும் உடல்அசைவு மூலமே விளையாடலாம். '3டி சமிக்ஞை' முறையில் இயங்கும் இந்த டி.வி. தயாரிப்புப் பணிகள் தொடங்கிவிட்டன. அடுத்த கிறிஸ்துமஸ் பண்டிகையை இந்த டி.வி.யுடன் கொண்டாடலாம் என்று இதை தயாரிக்கும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன
வியாழன், 7 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக