காரைக்குடி: சூரிய சக்தி மூலம் (சோலார் எனர்ஜி) இயங்க கூடிய சைக்கிள் தொழில் நுட்பத்தை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ராணுவ வீரர் பூபதிராஜ், 49, கண்டுபிடித்துள்ளார். இன்ஜினியரிங் படித்துள்ள இவர், கடந்த 20 ஆண்டுகளாக 125 க்கும் மேற்பட்ட அறிவியல் சாதனங்களை உருவாக்கியுள்ளார். இவரது கண்டுபிடிப்புகளில் அலராம் சூட்கேஸ், நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றும்போது, திரவம் காலியானால் எச்சரிக்கும் ஐ.வி., மானிட்டர் கருவி போன்றவை முக்கியமானவை. தற்போது, சூரிய சக்தி,பேட்டரி மற்றும் "பெடல்' மூலம் இயங்க கூடிய சைக்கிள் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார்.
இரவு நேரங்களில் பேட்டரி மூலம்:பூபதிராஜ்கூறுகையில், "" சூரிய ஒளி தகடை பயன்படுத்தி ( சோலார் பிளேட்) டி.சி., மின்சாரமாக மாற்றி, பேட்டரியில் சேமித்து சைக்கிள் ஓட்டலாம். பேட்டரி தேவை இல்லையென்றால், சூரிய ஒளியை நேரடியாக பயன்படுத்தியும் வாகனம் ஓட்டலாம். இரவு நேரங்களில் பேட்டரி மூலம் குறைந்தது 60 கி.மீ., தூரம் வரை பயணிக்கலாம். இவை இரண்டுமே சாத்தியமில்லை என்றால், "பெடல்' மூலம் நேரடியாக சைக்கிளை இயக்கலாம். பகல் 11 முதல் மாலை 4 மணி வரை பேட்டரி இன்றி சூரிய ஒளி மூலம் வாகனத்தை நேரடியாகவே இயக்க முடியும். ஆனால், வேகம் குறைவாக இருக்கும். சாதாரண சைக்கிளில் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வாகனம் ஓட்டலாம். இதற்கு குறைந்தளவே செலவு செய்தால் போதுமானது, என்றார்.
நன்றி தினமலர்
0 comments:
கருத்துரையிடுக