சூர்யா ஜோதிகா புதிய sunrise விளம்பரம்
சர்க்கரை நோயாளிகளுக்கு புதிய ஊசி கண்டுபிடிப்பு
புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தி வரும் இன்சுலின் ஊசியை போட்டுக் கொள்வதற்காக பயன்படுத்தப்பட்டு வரும் ஊசியின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் மருந்தை போட்டுக் கொள்வதற்காக பயன்படுத்தப்படும் ஊசியின் அளவு 5மில்லி மீட்டர் நீளம் கொண்டவையாகும்.இருப்பினும் பல்வேறு அளவுகளிலும் கிடைத்து வருகிறது. பெக்டான் டிக்கின்சன் அண்டு கம்பெனி தயாரித்துள்ள சிறிய வகை ஊசியின் நீளம் வெறும் 4மில்லி மீட்டர் நீளம் மட்டுமே. இது குறித்து கம்பெனியின் வர்த்தக மேலாளர் திவாகர் மிட்டல் கூறியதாவது: இன்சுலினுக்கான தயாரிக்கப்பட்டுள்ள ஊசி வகைகளில் இவை மிக சிறியவகையாகும். உலகத்திலேயே முதன் முறையாக இந்த சிறியவகை ஊசி பயன்படுத்துவதன் மூலம் சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த விதமான வலியும் ஏற்படாது. இவற்றை பயன்படுத்துவதன் மூலம் மிகப்பெரிய மாற்றங்களை காணமுடியும் என அவர் கூறினார்.
தேங்க்ஸ் தினமலர்
0 comments:
கருத்துரையிடுக