புதன், 25 மே, 2011

மிக சிறிய இன்சுலின் ஊசி

சூர்யா ஜோதிகா புதிய sunrise விளம்பரம்



சர்க்கரை நோயாளிகளுக்கு புதிய ஊசி கண்டுபிடிப்பு
புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தி வரும் இன்சுலின் ஊசியை போட்டுக் கொள்வதற்காக பயன்படுத்தப்பட்டு வரும் ஊசியின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் மருந்தை போட்டுக் கொள்வதற்காக பயன்படுத்தப்படும் ஊசியின் அளவு 5மில்லி மீட்டர் நீளம் கொண்டவையாகும்.இருப்பினும் பல்வேறு அளவுகளிலும் கிடைத்து வருகிறது. பெக்டான் டிக்கின்சன் அண்டு கம்பெனி தயாரித்துள்ள சிறிய வகை ஊசியின் நீளம் வெறும் 4மில்லி மீட்டர் நீளம் மட்டுமே. இது குறித்து கம்பெனியின் வர்த்தக மேலாளர் திவாகர் மிட்டல் கூறியதாவது: இன்சுலினுக்கான தயாரிக்கப்பட்டுள்ள ஊசி வகைகளில் இவை மிக சிறியவகையாகும். உலகத்திலேயே முதன் முறையாக இந்த சிறியவகை ஊசி பயன்படுத்துவதன் மூலம் சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த விதமான வலியும் ஏற்படாது. இவற்றை பயன்படுத்துவதன் மூலம் மிகப்பெரிய மாற்றங்களை காணமுடியும் என அவர் கூறினார்.
தேங்க்ஸ் தினமலர் 

வெள்ளி, 20 மே, 2011

பூனைகள் செய்யும் யோகா

thanks manithan

மனிதர்கள் யோகாசனம் செய்வதை நாம் அனைவருக்கும் பார்த்திருப்போம். ஆனால் இப்போது சற்று வித்தியாசமாக பூனை யோகாசனம் செய்கிறது. எப்படி இருக்கும் என்று யோசிக்கிறிங்களா இதோ உங்களுக்காக கீழே பூனைகள் யோகா செய்கின்றன. பார்த்து பழகிக் கொள்ளுங்கள்.


















செவ்வாய், 10 மே, 2011

முள்ளங்கி

சிறுநீர்ப் பிரச்சினைகளைப் போக்கும் முள்ளங்கி

சிவப்பு, வெள்ளை என இரண்டு வகையான முள்ளங்கி இருக்குது. இதில் வெள்ளை முள்ளங்கி மருந்தாகவும், உணவாகவும் சாப்பிட ஏற்றது.சிவப்பு முள்ளங்கி கொஞ்சம் சுவையாக இருக்கும், அவ்வளவு தான்!
முள்ளங்கியைப் பொறுத்தவரை, கிழங்கு, இலை, விதை மூன்றுமே மருத்துவக் குணமுள்ளவை. சமைக்கும்போதும், சாப்பிடும்போதும் முள்ளங்கியில இருந்து வெளியாகும் வாசனை சிலருக்குப் பிடிக்காது. சாப்பிட்ட பின்பும் நாம் விடும் மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும். கந்தகமும், பொஸ்பரசும் இதில் அதிகமாக இருக்குறது தான் அதுக்கு காரணம்.
உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி. பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் தரும். இட்லி வேகவைப்பது மாதிரி முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில வேக வைத்து, அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம். குழந்தைகள் குடிக்க மறுத்தால், கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுக்கலாம். இப்படிச் செய்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் இருக்காது.
சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம். முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும். இருந்தாலும், இதை அடிக்கடி சாப்பிட்டா வயிற்றில் பொருமல், எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். எனவே, அளவாக சாப்பிடுவது நல்லது.
thanks z9tech

page

An adventure called CaratLane