திங்கள், 23 ஆகஸ்ட், 2010

ரக்ஷா பந்தன் & ஆவணி ஆவிட்டம்

இன்று ரக்ஷா பந்தன் &  ஆவணி ஆவிட்டம்  


    என் இனிய பதிவு உலக சகோதரர்களுக்கு 


அன்பு தங்கையின்  ரக்ஷா பந்தன் வாழ்த்துகள் !!

























ரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளிற்
கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது
சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின்
மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின்
முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர்
ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை
நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி
கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன்,
அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம்.
அடிப்படையில் இந்துக்களால் கொண்டாடப்படும் இப்பண்டிகையை மதப்
 பணடிகை என்பதை விட சமுதாயப் பண்டிகை என்று கூறுவது பொருந்தும்.
வட இந்தியாவில் பிரபலமாக உள்ள இந்த நிகழ்ச்சி தற்போது தென்னிந்தி
யாவிலும் பிரபலமாகி வருகிறது. வண்ணமயமான ராக்கிகள், தென்னிந்தி
யாவில் சின்னச் சின்ன கடைகளில் கூட தொங்குவதைக் காணலாம்.
தங்கள் சகோதர அன்பை வெளிக்காட்டும் நிகழ்ச்சியாக இது பழங்காலந்தொட்டு
வழக்கில் இருந்து வருகிறது.



கி.பி. 1303ம் ஆண்டு சித்தூர்கரை (ராஜஸ்தான்) டெல்லி சுல்தான் 
அலாவுதீன் கில்ஜி தாக்க வரும் போது, ராணி பத்மினி 
அண்டை நாட்டு மன்னர்களுக்கு ராக்கி அனுப்பியதாக சரித்திரக்
 குறிப்புகள் உள்ளன. இதன் மூலம் தன் சகோதரியைக் காக்க அந்த 
மன்னர்கள் தங்கள் படைகளை அனுப்ப நிர்பந்தித்ததாகக் கூறப்படுகிறது!!



























ஆவணி ஆவிட்டம் 


























































இது
பிராமண சமூகத்தாரால் கொண்டாடப்படும் பண்டிகை வைபோகம் ! 


ஐயர் (அல்லது அய்யர், சாஸ்திரி, சர்மா, பட்டர்) என்றழைக்கப்படுவோர் தமிழ், தெலுங்கு மொழிகளை தாய்மொழிகளாக கொண்ட ஆதிசங்கரரின் அத்வைதத் தத்துவத்தைக் கடைப்பிடிக்கும் பிராமணர்கள் ஆவர். 






தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டுள்ள இவர்கள், பெரும்பாலும் தமிழகத்தில் வசிக்கின்றனர். குறிப்பிடத்தக்க அளவு கர்நாடகம், ஆந்திரம், கேரளத்திலும் காணப்படுகின்றனர்.







ஐயர் என்ற பெயர் இடைக்காலத்தில் தமிழகத்தில் உள்ள வெவ்வேறு பிராமண சமூகங்கள் ஒன்றுபட்ட சமுதாயமாகிய பொழுது உருவாகியது. அவர்களில் இருந்து விலகிய வைஷ்ணவத்தின் சம்பிரதாயங்களை கடைப்பிடிப்போரை ஐயங்கார் என்று அழைக்கிறோம். ஐயர்கள் தங்களின் பணிகளுக்கு ஏற்ப வெவ்வேறு உபகுழுக்களாக பிரிந்துள்ளனர். 



















வேதம் கோத்திரம் ஏற்ப பூணூல் வைபோகமாக 

இந்த ஆவணி அவிட்டத்தை சிறப்பாக கொண்டாடுகின்றனர் !!!









1 comments:

ஸ்ரீ.... சொன்னது…

ரக்‌ஷாபந்தன் வாழ்த்துக்கள் சகோதரி!

ஸ்ரீ....

page

An adventure called CaratLane