ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் வயிற்றனைநந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே
இன்று சங்கடகர சதூர்த்தி!!!
நான் எப்போதும் மாதம் ஒரு முறை வளர் பிறை
சங்கடகர சதூர்த்தி விரதம் இருப்பது வழக்கம்.
இன்று விரதம் இருக்க நினைத்து இருந்தும்
வேலை மும்முரத்தில் சங்கடகர சதூர்த்தி
என்பதை மறந்து விட்டேன்.பிறகு தான்
தெரிந்தது ..எதற்காக விரதம்? என்பது
பற்றி தான் இந்த பதிவு ..
தெரிந்து கொள்வோமா?
விரதத்தின் பலன்கள் :
இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட
நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும்.
வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு
உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை
அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு,
புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம்,
நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய
முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை
அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும்.
விரதம் இருப்பது எப்படி?
சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம்
அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன்
நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.
விநாயகர் ஓங்கார வடிவானவர், முப்பத்தி இரண்டு
விதமான வடிவங்களுடன் தோற்றமளிக்கும் விநாயகரின்
ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒவ்வொரு தத்துவங்கள் உள்ளன.
1. பால கணபதி
2. தருண கணபதி
3. பக்தி கணபதி
4. வீர கணபதி
5. சக்தி கணபதி
6. துவிஜ கணபதி
7. சித்தி கணபதி
8. உச்சிஷ்ட கணபதி
9. விக்ன கணபதி
10. க்ஷிப்ர கணபதி
11. ஏரம்ப கணபதி
12. லட்சுமி கணபதி
13. மகா கணபதி
14. விஜய கணபதி
15. நிறுத்த கணபதி
16. ஊர்த்துவ கணபதி
17. ஏகாட்சர கணபதி
18. வர கணபதி
19. திரயாட்சர கணபதி
20. க்ஷிப்ரப்ரசாத கணபதி
21. ஹரித்திரா கணபதி
22. ஏகதந்த கணபதி
23. சிருஷ்டி கணபதி
24. உத்தண்ட கணபதி
25. ரணமோசன கணபதி
26. துண்டி கணபதி
27. துவிமுக கணபதி
28. மும்முக கணபதி
29. சிங்கமுக கணபதி
30. யோக கணபதி
31. துர்க்கா கணபதி
32. சங்கடஹர கணபதி
1. பால கணபதி
2. தருண கணபதி
3. பக்தி கணபதி
4. வீர கணபதி
5. சக்தி கணபதி
6. துவிஜ கணபதி
7. சித்தி கணபதி
8. உச்சிஷ்ட கணபதி
9. விக்ன கணபதி
10. க்ஷிப்ர கணபதி
11. ஏரம்ப கணபதி
12. லட்சுமி கணபதி
13. மகா கணபதி
14. விஜய கணபதி
15. நிறுத்த கணபதி
16. ஊர்த்துவ கணபதி
17. ஏகாட்சர கணபதி
18. வர கணபதி
19. திரயாட்சர கணபதி
20. க்ஷிப்ரப்ரசாத கணபதி
21. ஹரித்திரா கணபதி
22. ஏகதந்த கணபதி
23. சிருஷ்டி கணபதி
24. உத்தண்ட கணபதி
25. ரணமோசன கணபதி
26. துண்டி கணபதி
27. துவிமுக கணபதி
28. மும்முக கணபதி
29. சிங்கமுக கணபதி
30. யோக கணபதி
31. துர்க்கா கணபதி
32. சங்கடஹர கணபதி
மாலை ஆலயத்திற்கு சென்று, விநாயகப் பெருமானுக்கு
நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள
வேண்டும்.அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை
வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும்
முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக்
கொள்ள வேண்டும்.விநாயகப் பெருமானுக்கு வெள்ளை
எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும். சங்கடஹர
சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய,
"ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி : ப்ரசோதயாத்"
எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர்
அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானிக்க வேண்டும்
.