மூளையை ஸ்கேன் செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலம் குறித்து திட்ட மிட முடியாமல் பலர் குழம்புகின்றனர்.
இனி அந்த கவலை தேவை இல்லை. மூளையை ஸ்கேனிங் செய்து அதன் மூலம் எதிர்கால திட்டங்கள் மற்றும் லட்சியங்களை கணிக்க முடியும்.
இதற்கான ஆய்வை கலிபோர்னியா பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். இவர்கள் மனிதனின் மூளையில் புதிதாக “மேப்பிங்” முறையை பயன்படுத்தினர்.
அதன் மூலம் அவர்களின் மனதில் எதிர்காலத்தில் அவர்களின் லட்சியம் என்ன? எந்தவிதமான பாடப்பிரிவை எடுத்து படித்து நிபுணராக முடியும் என்று கணித்துள்ளனர். இதற்கு “மனோதத்துவ கணக்கீடு” என்று பெயரிட்டுள்ளனர்.
இது குறித்து மனநல பேராசிரியர் ரிச்சர்டு ஹயர் ஒரு ஆய்வு நடத்தினார். ஒருவருக்கு உள்ள திறமை மற்றும் தனித்தன்மை என்ன என்று மூளைக்கு தான் தெரியும். எனவே, மூளையை “ஸ்கேன்” செய்வதன் மூலம் இதை கண்டறிய முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்காக அவர் 6 ஆயிரம் பேரின் மூளைகளை ஸ்கேன் செய்து ஆய்வு மேற் கொண்டார்.
4 comments:
சரிங்க கீதா மூளை இல்லாதவங்களை எப்படி ஸ்கேன் செய்வாங்க ..
another approximation based on statistics, but would be accepted with certainty.
hhmmmm...
அய்யா இதிலும் சந்தேகமா?
மூளை இல்லாதவர்களை ஸ்கேன் பண்ணும் போது.
உனக்கு தான் மூளை இல்லைன்னு தெரியும் இல்லை? GET LOST!
பெருசா ஸ்கேன் பண்ண வந்துட்டாங்க..
என்று மெசேஜ் வரும்..சத்தம் இல்லாமல் எஸ் ஆகணும் ..புரியுதா?
வார்த்தை வாங்க .தேங்க்ஸ் !!
SSS all asumptions! only..
determination!
கருத்துரையிடுக