சனி, 13 மார்ச், 2010
ரோபோ
ரோபோ
ரோபோ வடிவத்தில் ! வெறும் இயந்திரம் எனும் நிலையில் ஆரம்பிக்கப்பட்ட ரோபோக்களின் இன்றைய வளர்ச்சி பிரமிப்பூட்டுகிறது.
ரோபோக்களின் “அறிவு” படிப்படியாய் வளர்ந்து கொண்டே வருகிறது. முதலில் சுவிட்ச் போட்டால் ரோபோக்கள் இயங்கின, பின்னர் கம்ப்யூட்டரின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டன, இப்போதோ மனித மனதிற்கே கட்டுப்படுகின்றன என பரபரப்பு ஏற்றுகிறார் இவர். கூடவே, ரோபோக்களின் வளர்ச்சி ஒவ்வோர் நாட்டிலும் வெகு சுதந்திரமாய் வளர்கிறது. இது ஆபத்தானது. “அணு” வுக்கு இருப்பது போல உலகளாவிய சட்டங்களும் கட்டுப்பாடுகளும் ரோபோ தயாரிப்பிலும் வரவேண்டும் என காரசார அரசியலையும் கலக்கிறார்.
வயர்களும், இரும்புக் கம்பிகளும் கொண்ட லெப்ட் ரைட் போட்டு நடக்கும் “மெஷின் லுக்” ரோபோக்கள் இப்போதெல்லாம் குறைந்துவிட்டது. அச்சு அசலாக மனிதர்களைப் போலவே இருக்கும் ரோபோக்கள் தான் லேட்டஸ்ட் டிரண்ட். ஜப்பானில் சமீபத்தில் கோபியன் எனும் ரோபோவை வெள்ளோட்டம் விட்டார்கள். இது ஏழு விதமான மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்தி வியப்பூட்டியது. அட்ஷோ டகான்ஸி தலைமையில் டோக்கியோவிலுள்ள வசீடா அறிவியல் மற்றும் பொறியியல் கல்வி நிறுவனம் இதை உருவாக்கியிருந்தது.
போர்களில் ரோபோக்களின் பணி இனிமேல் வெகுவாக அதிகரிக்கப் போகிறது. வெடிகுண்டுகளை அழிக்கும் பணியில் இப்போதே பல ரோபோக்கள் ஈடுபட்டுள்ளன. ஆளில்லாத ரோபோ விமானங்களையும் செய்தாகிவிட்டது. இவற்றை ராணுவ தளத்தில் இருந்து கொண்டு செயற்கைக் கோள் மூலமாக இயக்க முடியும். இதன் அடுத்த இலக்கு, தொலைவில் இருந்து கூட இயக்கத் தேவையில்லாத ரோபோக்கள். அதாவது ரோபோக்களே தீர்மானிக்கும், எங்கே குண்டு போடவேண்டும், எப்போது போடவேண்டும் என்பதை !
இப்படி சகட்டு மேனிக்கு ரோபோக்கள் அதிகரிப்பதால் வேலையில்லாத் திண்டாட்டம் 2030ல் பல மடங்கு அதிகரிக்கும் என்கிறார் அமெரிக்காவின் மார்ஷல் பிரைன் எனும் பியூச்சராலஜிஸ்ட். ரோபோவைச் செய்யும் வேலை மட்டும் தான் மனிதனுக்கு. மற்ற வேலைகளெல்லாம் இனிமேல் ரோபோவுக்கு.
ரோபோக்களைக் குறித்து அடைமழை போல வரும் வியப்பும், திகைப்புமான செய்திகளுக்குச் சிகரம் வைக்கிறார் ஹாலந்தில் ரோபோ ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்ற லெவி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக