வியாழன், 28 ஜூலை, 2011

வீடியோ விளக்கத்துடன் அசத்தும் இணைய அகராதி

http://www.wordia.com/
 thanks z9tech
வோர்டியாவை மிகவும் சுவாரஸ்யமான இணைய அகராதி என்று வர்ணிக்கலாம். சுவாரஸ்யமானது மட்டும் அல்ல உயிரோட்டமானதும் கூட. அத்துடன் மிகவும் வண்ணமயமானதும் தான்.
வோர்டியா மற்ற அகராதிகளை போல சொற்களுக்கான அர்த்தத்தை தருவதோடு அதற்கான வீடியோ விளக்கத்தையும் தருகிறது என்பதே விஷேசம். இந்த வீடியோ விளக்கத்தை நீங்களும் சம்ர்பிக்கலாம் என்பது தான் இன்னும் விஷேசமானது.
ஆம் இணையவாசிகள் தங்களை கவர்ந்த சொல்லுக்கான வீடியோ விளக்கத்தை இந்த தளத்தில் சமர்பிக்கலாம். இதை தான் வீடியோ விளக்கம் மூலம் வார்த்தைகளுக்கு உயிர் கொடுப்பது என்று வோர்டியா பெருமையுடன் குறிப்பிட்டு கொள்கிறது.
இணையவாசிகள் சமர்பிக்கும் வார்த்தை விளக்க வீடியோக்கள் முகப்பு பக்கத்திலேயே அவர்கள் புகைப்படங்களோடு வரிசையாக இடம் பெறுகின்றன. அவற்றில் கிளிக் செய்தால் விளக்கத்தை கேட்கலாம். சமீபத்தில் சமர்பிக்கப்பட்டவை முதலில் இடம் பெறுகின்றன. மற்றவற்றை தேடிப்பார்க்கலாம்.
எந்த‌ வார்த்தைக்கான பொருள் தேடினாலும் அதற்கான அகராதி அர்த்தம் வந்து நிற்கிறது. அந்த சொல்லின் பயன்பாடு போன்ற விவரங்களும் கொடுக்கப்படுகிறது. கூடவே அந்த சொல்லுக்கான வீடியோ விளக்கத்தையும் காணலாம். அதாவது அந்த சொல்லை யாராவது வீடியோ மூலம் விளக்கியிருந்தால், இல்லையென்றால் நீங்கள் கூட விளக்கத்தை சமர்பிக்கலாம்.
ஒரே வார்த்தைக்கு பலர் விளக்கம் அளித்திருந்தால் அவை அனைத்துமே இடம் பெறுகின்றன. உறுப்பினர்கள் அவற்றுக்கு வாக்களிக்கலாம். அந்த வாக்குகளின் அடிப்படையில் அவர் வரிசைப்படுத்தப்படும்.
சமீபத்திய வீடியோ, அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்னும் தலைப்புகளிலும் விளக்கங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு சொல்லுக்கு ஒரு அழகு உண்டு. தனி நபர்கள் குறிப்பிட்ட சொல் தங்களுக்குள் ஏற்படுத்திய பாதிப்பு பற்றி விளக்கும் போது அந்த அழகை உணர முடியும்.
அதே நேரத்தில் தனிப்பட்ட விளக்கங்களை கேட்கும் போது ஒரு சொல்லின் பொருளையும் விரிவாக அறிந்து கொள்ள முடியும். உறுப்பினர் அனுபவம் சார்ந்து அதன் பொருளை விவரிப்பதால் அந்த சொல்லின் பயன்பாடு சார்ந்து அதனை புரிந்து கொள்வதும் சாத்தியமாகும்.
இப்படி வீடியோ விளக்கத்தை இணைப்பதன் முலம் அகராதிகளுக்கே புதிய பரிமாணத்தை வோர்டியா கொண்டு வந்து விடுகிறது.
இணையவாசிகள் சமர்பிக்கும் விளக்கம் தவிர துறை சார்ந்த நிபுணர்களின் விளக்கஙக்ளும் சேர்க்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் பள்ளி மாணவர்களுக்கான புதிய பகுதியும் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்போதைக்கு ஆங்கில மொழி சொற்களே இடம் பெற்றுள்ளன. விரைவில் மற்ற மொழிகளையும் இணைக்கு திட்டம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கு ஆர்வம் உள்ளவர்களை வர‌‌வேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்சிரீதியிலான அகராதி என்னும் புதிய வகையான அகராதியாக இந்த தளம் உருவாகியிருப்பதாக பாராட்டப்படுகிற‌து.

வெள்ளி, 22 ஜூலை, 2011

பியானோ இசையால் உருவானது தொலைபேசி


thanks dinamalar

வியாழன், 21 ஜூலை, 2011

சிங்கம் சிங்கிளாக வரும்



சிங்கம்  சிங்கிளாக  வரும் என்று கேள்வி பட்டு  இருக்கோம்!
ஆனால் ஒரு மனிதர் முப்பத்தி எட்டு சிங்கங்களுடன்
எத்தனை  தைர்யமாக விளையாடுகிறார் பாருங்கள்.!!!
நிஜம் !!

செவ்வாய், 19 ஜூலை, 2011

கூகிள் டூடில் டுடே

நூற்றி எண்பத்தி ஒன்பதாவது பிறந்தநாள் -
கிரெகோர்   மென்டல்  .ஜெனிடிக்ஸ் ஸ்டடி .
ஸ்டடி ஆப   தி  இன்ஹெரிட் டென்ஸ்...
 Gregor Johann Mendel (July 20, 1822 – January 6, 1884)
thanks Bala Rekha 

Google's Doodle for today (20.07.2011)

திங்கள், 18 ஜூலை, 2011

வணக்கம்: இக்கட சூடுங்க ...

வணக்கம்: இக்கட சூடுங்க ...

ஞாயிறு, 17 ஜூலை, 2011

பிக் பஜாரில் புதுமையான நிகழ்ச்சி

சென்னை : பியூச்சர் குழுமத்தின் ஒரு அங்கமான, "பேஷன் அண்ட் பிக் பஜார்', சென்னை மக்களின் கனவை நனவாக்க, "ஜஸ்ட் டிரை பண்ணுங்க' என்ற தலைப்பில் புதுமையான நிகழ்ச்சி ஒன்றை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் அனைவருக்கும், 75 ரூபாய் மதிப்புள்ள கூப்பன் ஒன்றை, "பேஷன் அண்ட் பிக் பஜார்' அளிக்கும். இந்த கூப்பனை பயன்படுத்தி, 600 ரூபாய்க்கு பொருட்களை வாங்கும்போது, 75 ரூபாய் தள்ளுபடி பெறலாம். இந்த கூப்பனைக்கொண்டு, புதிய பேஷன் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, போட்டி ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

இதற்கான நுழைவு படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து, போட்டிக்கு தகுதி பெறலாம். முதலாவது நிகழ்ச்சி, வரும் 18ம்தேதி, பிக் பஜாரில் நடைபெறும். இதில் பங்கேற்பவர்களின் பொழுதுபோக்கு திறன், குரல் மற்றும் நம்பிக்கை அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும். தேர்ச்சி பெறும் நபர்கள், 24ம்தேதி நடைபெறும் இறுதி நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு, பிரபலங்கள் அடங்கிய நடுவர்களால் தேர்வு செய்யப்படுவர்.

Thanks  Dinamalar.com

புதன், 6 ஜூலை, 2011

இணைய செய்தி உங்களுக்கு பிடித்த வண்ணத்தில் இணையத்தை மாற்றம் செய்வதற்கு..

தினமும் இணையதளம் படிக்கும் வாசகர்கள் பல பேர் இருக்கின்றனர். இவர்களில் சில பேர் சில இணையதளங்களின் வண்ணம் சரியாக இல்லையே என்று குறைபடுவதுண்டு.
இனி அந்த கவலை வேண்டாம். நமக்கு பிடித்த இணையதளத்தை நமக்கு பிடித்த வண்ணத்தில் மாற்றி படிக்கலாம். தினமும் பல்லாயிரக்கணக்கான இணையதளங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் சில தளங்கள் பார்ப்பதற்கு அழகாக தெரியும்.
அதில் இருப்பது போல் வண்ணம் நம் தளத்தில் அல்லது பார்த்துக் கொண்டிருக்கும் தளத்தில் தெரிந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணும் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று நமக்கென்று புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு நொடியில் உருவாக்கி கொண்டு இந்த சேவையை பயன்படுத்தலாம். Enter Url என்பதை சொடுக்கி நாம் வண்ணத்தை மாற்ற விரும்பும் தளத்தின் முகவரியை கொடுத்து Proceed என்ற பொத்தானை சொடுக்கினால் போதும்.
அடுத்து வரும் திரையில் வலது பக்கம் இருக்கும் Hue, Saturation, Lightness,C ontrast, redness, Greenness, Blueness போன்றவற்றில் நமக்கு பிடித்தவாறு கலர் மாற்றம் செய்து Proceed என்ற பொத்தானை சொடுக்கி அடுத்து வரும் திரையில் Download Result என்பதை சொடுக்கி எளிதாக தரவிறக்கலாம்.
Thanks ztech
click  here!!


page

An adventure called CaratLane