உங்கள் கணணியை முழுதாகவே தமிழில் மாற்ற நம்மில் பலருக்கு ஆசை
இருக்கலாம். ஆனால் எவ்வாறு மாற்றுவது? அதற்கு எவ்வாறான மென்பொருட்கள் தேவை?
இது இலவசமாக கிடைக்குமா? என்பது பலரின் எதிர்பார்ப்பு.
உங்களிடம்
BitLocker குறியாக்கம் செயல்படுத்தப்பட்டிருந்தால் LIPஐ நிறுவுவதற்கு முன்
அதை இடைநிறுத்தி வைக்கவும். Control Panelஐ திறந்து System and Security
என்பதைத் தேர்ந்தெடுத்த பின், BitLocker Drive Encryption என்பதைத்
தேர்ந்தெடுக்கவும். Suspend Protection என்பதைக் கிளிக் செய்யவும்.
Windows 7 LIPஇன் 32 பிட் மற்றும் 64 பிட் பதிப்புகளின் பதிவிறக்கங்கள்
தனித்தனியே கிடைப்பதால் பதிவிறக்கத்தைத் தொடங்குவதற்கு முன் Windows 7இன்
எந்த பதிப்பை நிறுவியுள்ளீர்கள் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.
Windows 7இன் எந்த பதிப்பை நிறுவியுள்ளீர்கள் என்பதை பின்வருமாறு
தீர்மானிக்கலாம்: Start பொத்தானைக் கிளிக் செய்த பின் கணணி என்பதில் வலது
கிளிக் செய்து Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் கணணி குறித்த
அடிப்படைத் தகவலை இது காண்பிக்கும்.
அமைப்பு வகைக்கு, அமைப்பு என்ற பிரிவைப் பார்க்கவும். உங்கள் Windows 7
இயக்க முறைமை, 32 பிட் இயக்க முறைமையா அல்லது அது 64 பிட் இயக்க முறைமையா
என்பதை இது காட்டும். 32 பிட் பதிப்பை நிறுவ நீங்கள் இவற்றை செய்யலாம்:
குறிப்பிட்ட இணையதளத்திற்கு சென்று தகவலிறக்கம் என்ற பொத்தானைக் கிளிக்
செய்யவும், பின்னர் LIP -ஐ நிறுவ Open என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது
தகவலிறக்கம் என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும், கோப்பை உங்கள் கணணிக்கு
நகலெடுக்க Save என்பதைக் கிளிக் செய்யவும்.
LIPஐ நிறுவ பதிவிறக்கிய கோப்பிற்கு சென்று அதை இரு முறை கிளிக்
செய்யவும். 64 பிட் பதிப்பை நிறுவ மேலே உள்ள இரண்டாவது விருப்பத்தையே
நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
இணையதள முகவரி
கிளிக் பண்ணுங்க !
தேங்க்ஸ் z9tech