சனி, 11 பிப்ரவரி, 2012

லேடீஸ் ஸ்பெஷல்

லேடீஸ் ஸ்பெஷல் படிக்கலாம் வாங்க!!!!!
சாதிக்க துடிக்கும் சகோதரிகளுக்கு ...
பெண்கள் மாத இதழ் !!! இந்த மாதம் படிச்சுடீங்களா?
இங்கு சென்று மெம்பெர் ஷிப் கணக்கு ப்ரீ ஆக உருவாக்கி கொள்ளுங்கள்,
ரெஜிஸ்டர் செய்தவர்கள் மட்டுமே ஈ  புத்தகத்தை முழுவதுமாக 
படிக்கலாம். நிறைய மாத/வார இதழ்கள் மூலமாக சில டாபிக் மட்டும் 
ஆண் லைன் ல் படிக்கலாம்.. முழவதையும் படிக்க subscribe 
செய்தால் மட்டுமே முழுவதையும் படிக்க முடியும்..(பணம் கட்ட வேண்டும்)

லேடீஸ் ஸ்பெஷல் முற்றிலும் இலவசமாக .,டவுன்லோட் செய்யாமல் .,அப்படியே படிக்கலாம்.!

நன்றி லேடீஸ் ஸ்பெஷல்.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

சூர்ய சக்தியில் ஓடும் சைக்கிள்




காரைக்குடி: சூரிய சக்தி மூலம் (சோலார் எனர்ஜி) இயங்க கூடிய சைக்கிள் தொழில் நுட்பத்தை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ராணுவ வீரர் பூபதிராஜ், 49, கண்டுபிடித்துள்ளார். இன்ஜினியரிங் படித்துள்ள இவர், கடந்த 20 ஆண்டுகளாக 125 க்கும் மேற்பட்ட அறிவியல் சாதனங்களை உருவாக்கியுள்ளார். இவரது கண்டுபிடிப்புகளில் அலராம் சூட்கேஸ், நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றும்போது, திரவம் காலியானால் எச்சரிக்கும் ஐ.வி., மானிட்டர் கருவி போன்றவை முக்கியமானவை. தற்போது, சூரிய சக்தி,பேட்டரி மற்றும் "பெடல்' மூலம் இயங்க கூடிய சைக்கிள் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார்.

இரவு நேரங்களில் பேட்டரி மூலம்:பூபதிராஜ்கூறுகையில், "" சூரிய ஒளி தகடை பயன்படுத்தி ( சோலார் பிளேட்) டி.சி., மின்சாரமாக மாற்றி, பேட்டரியில் சேமித்து சைக்கிள் ஓட்டலாம். பேட்டரி தேவை இல்லையென்றால், சூரிய ஒளியை நேரடியாக பயன்படுத்தியும் வாகனம் ஓட்டலாம். இரவு நேரங்களில் பேட்டரி மூலம் குறைந்தது 60 கி.மீ., தூரம் வரை பயணிக்கலாம். இவை இரண்டுமே சாத்தியமில்லை என்றால், "பெடல்' மூலம் நேரடியாக சைக்கிளை இயக்கலாம். பகல் 11 முதல் மாலை 4 மணி வரை பேட்டரி இன்றி சூரிய ஒளி மூலம் வாகனத்தை நேரடியாகவே இயக்க முடியும். ஆனால், வேகம் குறைவாக இருக்கும். சாதாரண சைக்கிளில் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வாகனம் ஓட்டலாம். இதற்கு குறைந்தளவே செலவு செய்தால் போதுமானது, என்றார்.

நன்றி தினமலர் 

திங்கள், 30 ஜனவரி, 2012

கர்நாடக இசை கற்பிக்கும் கல்வி மையங்கள்


நமது இந்திய கலாசாரங்களில் பாரம்பரியம் மிக்க இசையாக கர்நாடக இசை விளங்குகிறது. இந்த இசைக்கு தலையசைக்காதவர்கள் எவரும் இல்லை என்று கூறலாம். முற்காலத்தில் இசைக் கற்க விரும்பியவர்கள் ஆசிரியருடன் தங்கி குருகுலம் பயிற்சியாக தான் இசைக் கற்று வந்தனர். இக்காலக்கட்டத்தில் இசை கற்பதற்கு அதித வாய்ப்புகள் உள்ளது. இசை எல்லோராலும் சுலபமாக கற்றுக் கொள்ள இயலாது, இசைக் கற்க குரல் வளம் மிகவும் முக்கியமானதொன்றாகும். ஒரு சிலர் எவ்வளவு தான் பயிற்சி பெற்றாலும் இனிமையாக பாடுவதென்பது கடினமாகவே உள்ளது. குரல் வளம் உள்ளவர்கள் முறையான பயிற்சி பெறுவதன் மூலம் இசையில் சிறந்து விளங்க முடியும். தற்போது இசை கற்பதற்கென்று ஏராளமான பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் முழு நேரப் படிப்பாகவும், மாலை நேர படிப்பாகவும் கற்றுத் தரப்படுகிறது. இன்னும் ஒருபடி முன்னேறி, அஞ்சல் வழிக்கல்வி முறையில் இசை பயிற்சியளிக்கப்படுகிறது. கல்லூரி மற்றும் பள்ளிகளில் இசை பயிற்றுவிக்கும் ஆசிரியர் பயிற்சியும் வழங்கப்படுகிறது. கர்நாடக இசை என்பது வாய்ப்பாடு, வாத்தியங்கள் என இரண்டு வகையாக சொல்லித் தரப்படுகிறது. சில கல்வி நிறுவனங்களில் பரத நாட்டியம், வயலின், மிருதங்கம், வீணை உள்ளிட்ட பல பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. இசையில் சான்றிதழ், டிப்ளமோ, இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி போன்ற படிப்புகள் உள்ளன. இசைப் படிப்பு வழங்கும் பல்கலைக்கழகங்கள்: சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பல்கலைக்கழகம் போன்ற பல்கலையில் இசை பட்டப்படிப்பாக கற்றுத் தரப்படுகிறது. அரசு இசைக் கல்லூரிகள்: சென்னை, மதுரை, கோவை, திருவையாறு போன்ற நகரங்களில் அரசு இசைக் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இவற்றில் தேவாரம் கற்றுத் தருவதோடு கர்நாடக மரபிசையில் வாய்ப்பாட்டும் தனியாக கற்றுக்கொடுக்கப்படுகிறது. இந்த பயிற்சி மட்டுமல்லாமல் இசைக்கருவிகள் வாசிப்பு, தவீல், கடம், பரதநாட்டியத்துக்கான நட்டுவாங்கம் மற்றும் நாட்டுப்புற பாடல், நாட்டுப்புற நடனம் உள்ளிட்ட அனைத்து வகை பயிற்சிகளும் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. அரசு இசைப்பள்ளி: தமிழ் நாட்டில் மொத்தம் 22 அரசு இசைப்பள்ளிகள் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு முழு நேர இசைப் பயிற்சியளிக்கப்படுகிறது. பயிற்சி முழுவதும் முடிந்த பிறகு பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்படும். மாலைநேர பயிற்சி: சென்னை, மதுரை அரசு இசைக் கல்லூரிகளில் இசை உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் முறையாக கற்று தரப்படுகிறது. இரண்டு வருடப் படிப்பாகவும் வழங்கப்படுகிறது. இசையில் ஆசிரியர் பயிற்சி: அரசு இசைக்கல்லூரிகளில் ஆசிரியருக்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது. இந்த ஓராண்டு பயிற்சி பள்ளி, கல்லூரிகளில் இசைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சியாகும். இசைக்கான முக்கிய கல்லூரிகள்: 1. ராணி மேரி மகளிர் கல்லூரி, சென்னை இங்கு இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி போன்ற படிப்புகள் படிக்கலாம். 2. தமிழிசைக் கல்லூரி, ராஜா சர் அண்ணாமலை செட்டியாரால் துவக்கப்பட்டதாகும். இக்கல்லூரியில் சான்றிதழ், இளநிலை ஆகிய படிப்புகள் வழங்கப்படுகிறது. 3. தஞ்சையிலுள்ள சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பாக வழங்கி வருகிறது. 4. மதுரை சத்குரு சங்கீத வித்யாலயா கல்வி நிறுவனத்தில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளை வழங்கப்படுகிறது. 5. கலாஷேக்த்ரா - சென்னையில் புகழ்பெற்ற கலைக்கூடமாகும். இங்கு டிப்ளமோ மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்பு வழங்குகிறது. 6. எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்பாக அளிக்கப்படுகிறது.
நன்றி  தினமலர்  

வெள்ளி, 25 நவம்பர், 2011

மின் கட்டண மாற்றம்

மின் கட்டண முறைகளில், ஒவ்வொரு பிரிவிலும் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்புதிய கட்டண முறை, ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக மின் வாரியம், 53 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் தவிக்கிறது. இதை சரி செய்ய, மின் கட்டணத்தை உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில், மின் கட்டண உயர்வு கோரி, மனு தாக்கல் செய்துள்ளது. இதில், மின் கட்டண முறைகளில் அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
என்ன மாற்றம்?இதுகுறித்து, எரிசக்தி துறை வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள்:செயல்பாட்டில் இருக்கும் கட்டண முறைப்படி, இரண்டு மாதங்களில், 100 யூனிட்களுக்குள் பயன்படுத்துவோர் மற்றும் இரண்டு மாதங்களில், 100 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துவோர் என, இரண்டு பிரிவாகவும், ஒன்று முதல் 50 யூனிட்களுக்கு ஒரு கட்டணமும், 51 முதல் 100 யூனிட்களுக்கு ஒரு கட்டணமும் இருந்து வந்தது.இதேபோல், ஒவ்வொரு பிரிவிலும், யூனிட்களின் பயன்பாடுகளுக்கு ஏற்ப, கட்டண விகிதம் மாறுபாடாக உள்ளது. இக்கட்டண முறை அனைத்தும், தற்போது அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.அதன்படி, ஒன்று முதல், 200 யூனிட்களுக்கு ஒரு கட்டணம், 201 முதல், 500 யூனிட்களுக்கு ஒரு கட்டணம், 501 யூனிட்களுக்கு மேல் ஒரு கட்டணம் என, மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விசைத்தறி பிரிவில், 500 யூனிட்கள் வரை இலவசமாகவும், அதற்கு மேல் பயன்படுத்தும் யூனிட்டிற்கு ஒரு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், சிறு, குறு தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், சினிமா ஸ்டூடியோக்கள், படப்பிடிப்பு தளங்கள், கல்வி நிறுவனங்கள், ரயில்வே ஆகியவற்றிற்கு, ஒரே விதமான கட்டண முறை அமலுக்கு வரவுள்ளது.இவ்வாறு எரிசக்தி துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆணையம் மாற்றும்?தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், புதிய மின் கட்டணத்தில், மேலும் மாற்றம் கொண்டு வர உத்தரவிடும் எனத் தெரிகிறது. ஏனெனில், மின் வாரிய நிறுவனங்களின் இழப்புகளை சரிகட்டும் விதத்தில், மின் கட்டண மாற்றம் இருக்க வேண்டும் என, மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல், இந்திய மின்சார சட்டப்படி, மின்சாரம் வழங்குவதற்கு ஆகும் செலவில், 20 சதவீதம் குறைவாகவோ அல்லது 20 சதவீதம் அதிகமாகவோ மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று இருப்பதால், தமிழக மின் துறையின் கணக்குகள், மாறுபட வாய்ப்பு உள்ளது.
மக்களிடம் கருத்து கேட்பு…:புதிய மின் கட்டணம் குறித்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், விரைவில் விசாரணை நடத்தி, பொதுமக்கள், தொழிற்சாலை அதிபர்கள், நுகர்வோர் அமைப்புகள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்கும்.இக்கருத்து கேட்பு கூட்டங்கள், சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட குறிப்பிட்ட மாவட்டங்களில் நடக்கும். இதையடுத்து, ஏப்ரல் 1ம் தேதிக்குள் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
நன்றி-தினமலர்

சனி, 27 ஆகஸ்ட், 2011

இலவசதிருமண தகவல் இணையதளம்

 

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஸ்ரீ காமாட்சி திருமண தகவல் மையம் என்ற நிறுவனத்தில் திருமண தகவல் தருவதை இலவசமாக சேவையாக செய்து வருகிறார்கள்.  அனைத்த இனததவரும் அனைத்து மதத்தவரும் வரன் தேடுபவர்கள் அனைவரும் இலவசமாக பதிவு செய்து கெொள்ளலாம்.  இந்நிறுவனத்தின் மூலம் இலவசமாக பதிவு செய்து இலவசமாக கடவுச்செொல் மற்றும் பதிவு எண் பெற்ற பின் தாங்களே இணையதளததின் மூலம் தங்களுக்குத் தேவையான வரன்களை தேர்ந்தெடுத்துக் கெொள்ளலாம்.  அவர்களுக்குத் தேவையான வரன்களன் முகவரி, மற்றும் தெொலைபேசி எண்களைப் பெற ஸ்ரீ காமாட்சி திருமண தகவல் மையத்தை தெொடர்பு கெொண்டு தெரிவித்தால் ஒரு வரனின ஜாதகத்திற்கு பிரிண்ட் அவுட் கட்டணமாக ரூ.20 மட்டும் வசூலிக்கப்படுகிறது.  மேலும் பதிவு செய்யும் ஜாதகர்கள் தங்களது ஜாதகத்தில் ஏற்பட்டுள்ள திருமண சம்பந்தமாக பிரச்சனைகளுக்கு இலவசமாக ஜாதக ஆலேோசனை வழங்கப்படுகிறது.  மேலும் வறுமைக்கேோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் திருமணத்திற்காக இந்நிறுவனத்தின் மூலம் திருமணம் முடிந்தால் வறுமைக்கேட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு திருமண உதவித் தெொகை வழங்கப்படுகிறது.  இந்நிறுவனத்தின் மூலம் பதிவு செய்பவர்கள் தங்கள் ஜாதகத்திற்கு ஏற்ற வரன்களைத் தேட பெொருத்தம் பார்ப்பது பற்றிய விளக்கங்கள் உள்ளன.  மேலும் இந்நிறுவனத்தில் பதிவு செய்பவர்கள் கமிஷன் ஏதும் செலுத்த வேண்டியதில்லை.  அனைத்து செயல்முறைகளும் இலவச சேவையாகவே செய்யப்படுகிறது.  இந்நிறுவனத்தின் மூலம் உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் திருமண வரன் தேடி பதிவு செய்து கெொள்ளலாம்.இந்நிறுவனத்தின் முகவரி ஸ்ரீ காமாட்சி திருமண தகவல் மையம், அரசு மருத்துவமனை ரோடு, எஸ்,எம்.லக்கி பிளாசா, முதல் மாடி, இராமநாதபுரம் மாவட்டம் - 623 501 அலைபேசி எண் -             9994796522       இணையதளம் முகவரி http://www.kamatchimatrimony.com/

thanks Senthivayal  

page

An adventure called CaratLane